மேலும் செய்திகள்
விபத்தில் வாலிபர் பலி
2 hour(s) ago
கோவில்களில் கும்பாபிஷேக விழா
2 hour(s) ago
தலையில் தேங்காய் உடைத்து மழை வேண்டி வழிபாடு
2 hour(s) ago
புலிகள் கணக்கெடுப்பு கேமராக்கள் திருட்டு
13-Sep-2026
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
13-Sep-2026
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஆனந்துார் - ஓலப்பட்டி ரோடு மாவத்துார் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ எடையுள்ள, 13 மூட்டைகளில், 650 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. அரிசியுடன் காரை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்டம் முட்டியாளன்கொட்டாயை சேர்ந்த கதிரவன், 43, பாபு, 33 ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், அப்பகுதியிலுள்ள வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரிந்தது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
13-Sep-2026
13-Sep-2026