காவலர் பணிக்கு எழுத்து தேர்வு கி.கிரியில் 658 பேர் ஆப்சென்ட்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில், 658 பேர் பங்கேற்கவில்லை.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் மூக்கண்டப்பள்ளி செயின்ட் ஜோசப் பள்ளி என, இரு மையங்களில், இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு காவலர் மற்றும் சிறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று காலை, 10:00 முதல், மதியம், 12:40 மணி வரை நடந்தது.ஓசூர் அதியமான் கல்லுாரி வளாகத்தில் மொத்தம், 2,875 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 529 பேர் தேர்விற்கு வரவில்லை. செயின்ட் ஜோசப் பள்ளியில், 618 பெண்கள் மட்டும் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 129 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.ரயில்வே ஐ.ஜி., பாபு மற்றும் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை ஆகியோர், தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஏ.டி.எஸ்.பி., சங்கர் தலைமையிலான போலீசார், இரு மையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.