7 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பு
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளி அருகே மட்ட மத்திகிரி பகுதியிலுள்ள ராகி தோட்டத்திற்குள் நேற்று மாலை, 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று, புதரில் மறைந்து கொண்டது. தேன்கனிக்கோட்டை தீயணைப்புத்துறையினர் வந்து, பாம்பை லாவகமாக பிடித்து, அருகிலுள்ள காப்புக்காட்டில் விட்டனர். இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.