மேலும் செய்திகள்
பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
14-Jun-2025
போச்சம்பள்ளி :கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சந்துார் கிராமத்தில், தாமரை செல்லியம்மன் சுவாமி, 3ம் ஆண்டு மாவிளக்கு, பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு மூலவர் தாமரை செல்லியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது.இக்கோவிலுக்கு உட்பட்ட சந்துார், மகாதேவகொல்லஹள்ளி, பட்டகப்பட்டி, வேடர்தட்டக்கல், கெங்காவரம், சவுள்கொட்டாய், குட்டப்பட்டி உள்ளிட்ட, 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி, மேள, தாளத்துடன், தாரை, தப்பட்டை முழங்க, கிராமிய கலைக்குழுவினரின் கோலாட்டம், ஒயிலாட்டத்துடன், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
14-Jun-2025