உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஈச்சர் வாகனம் கவிழ்ந்து 8 டன் தக்காளி சேதம்

ஈச்சர் வாகனம் கவிழ்ந்து 8 டன் தக்காளி சேதம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சென்னப்ப நாயக்கனுார் அருகே, தக்காளி ஏற்றிச்சென்ற ஈச்சர் வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை-யோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஓசூரிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி, 8 டன் தக்காளியை ஏற்றிய வாகனம், நேற்று அதிகாலை சென்னப்பநாயக்கனுார் அருகே சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை-யோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் இருந்த தக்-காளி அனைத்தும் சாலையில் கொட்டி சேதமாகின. அதிர்ஷ்ட-வசமாக டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை