உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சில வரி செய்தி: அக். 21

சில வரி செய்தி: அக். 21

கிருஷ்ணகிரி: கீரப்பனுாரை சேர்ந்த லட்சுமையன், 55, நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு, மனைவி வினோதா, 45, என்பவரை அடித்து கொலை செய்தார். அதன்பின் லட்சுமையன், மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுமங்களப்பட்டி சிவக்குமார், 28, அன்புசெல்வன், 29, ஆகிய இருவரை, திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி: பொம்மாண்டப்பள்ளியை சேர்ந்த டிரைவர் மல்லேஷ், 28, அக்., 18ம் தேதி நண்பர் வீட்டிற்கு மது அருந்த சென்றபோது, நண்பரின், 11 வயது மகளை பலாத்காரம் செய்தார். சிறுமியின் தாய் புகாரில், ஓசூர் மகளிர் போலீசார், ‘போக்சோ’வில் மல்லேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி