உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வனப்பகுதியில் கழிவுகளை கொட்டிய டிரைவருக்கு ரூ.10,000 அபராதம்

வனப்பகுதியில் கழிவுகளை கொட்டிய டிரைவருக்கு ரூ.10,000 அபராதம்

வனப்பகுதியில் கழிவுகளை கொட்டிய டிரைவருக்கு ரூ.10,000 அபராதம்ஓசூர், அக். 12-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு, பேரண்டப்பள்ளி, கரியானப்பள்ளி, மேலுமலை தேசிய நெடுஞ்சாலையோரம் வனப்பகுதியில், கழிவுகளை கொட்டி வருகின்றனர். இறைச்சி கழிவுகளை சிறுத்தை போன்ற வன விலங்குகள் சாப்பிட வருகின்றன. பிளாஸ்டிக் போன்ற கழிவுகளால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வனப்பகுதியில் கழிவுகளை கொட்ட கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது. அதையும் மீறி, பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு லாரியில் கொண்டு வந்து கழிவுகளை கொட்டினர். இதை பார்த்த வனத்துறையினர், லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். அவர் கிருஷ்ணகிரி அருகே பாலேகுளியை சேர்ந்த சின்னதுரை, 34, என்பது தெரிந்தது. அவர் மீது வனச்சட்டப்படி குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வனப்பகுதியில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை