உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த அரசு பஸ்

ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த அரசு பஸ்

ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த அரசு பஸ்ஊத்தங்கரை, டிச. 29-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு பஸ் டிப்போவுக்கு உட்பட்ட மகளிர் டவுன் பஸ் நேற்று காலை 9:45 மணிக்கு போச்சம்பள்ளியிலிருந்து, கல்லாவி, நொச்சிப்பட்டி வழியாக ஊத்தங்கரை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஊனாம்பாளையம் என்ற இடத்தின் வளைவு பகுதியில் வந்தபோது, சக்கரத்திற்கும் ஸ்டேரிங்க்கும் இடையே உள்ள பிளேட் கட் ஆனதால், பஸ் திரும்பாமல் சாலையின் வலது புறம் நேராக விவசாய நிலத்திற்குள் புகுந்தது. பஸ்சில் பயணம் செய்த 61 பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கல்லாவி பகுதியை சேர்ந்த டிரைவர் விஜயகுமார்,39, நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தியா,31, பனமரத்துப்பட்டி அச்சுதா,23, ஆகியோர் பலத்த காயத்துடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை