குட்கா பதுக்கியவருக்கு வலை
சூளகிரி :சூளகிரி போலீசார் சுண்டகிரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு வீட்டில், குட்கா பதுக்கி வைத்திருப்பதாக தகவல் அறிந்து, போலீசார் சோதனை செய்தனர். அங்கு, 3,600 ரூபாய் மதிப்புள்ள, 1.350 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, ரவிக்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.