உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரெட்கிராஸ் சொசைட்டி ஆபீசில் ஆதார் சேவை மையம் துவக்கம்

ரெட்கிராஸ் சொசைட்டி ஆபீசில் ஆதார் சேவை மையம் துவக்கம்

கிருஷ்ணகிரி: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கிளை அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில், ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டது. ரெட் கிராஸ் மாவட்ட சேர்மேன் செபாஸ்டியன், செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) சரஸ்வதி, மாவட்ட கலெக்டரின் நேர்-முக உதவியாளர் (வளர்ச்சி) ராமஜெயம் ஆகியோர், ஆதார் சேவை மையத்தை திறந்து வைத்தனர். ஆதார் சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகவேல், பாக்கியலட்சுமி உட்-பட பலர் பங்கேற்றனர்.இந்த ஆதார் சேவை மையத்தில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்-தைகளுக்கு புதிய ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், பெயர் திருத்தம், மொபைல் எண் மாற்றம், முகவரி, பிறந்த தேதி மாற்றம் போன்ற அனைத்து பணிகளும் செய்யப்படும் எனவும், அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து வேலை நாட்க-ளிலும், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை செயல்-படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ