உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா துவக்கம்

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா துவக்கம்

ஒகேனக்கல், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஆடிப்பெருக்கு விழா காவிரி மற்றும் டெல்டா பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஒகேனக்கல்லில் இந்தாண்டு அரசு சார்பில், மூன்று நாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதில் தமிழகத்தின் பண்பாடு, கலாசாரம், பாரம்பரியத்தை போற்றும் வகையில் கலை நிகழ்சிகள் நடக்கவுள்ளது. வேளாண், தோட்டக்கலை, சுற்றுலா, கால்நடை, கூட்டுறவு, உணவு பாதுகாப்பு, செய்தி மற்றும் விளம்பரம், காவல்துறை உள்ளிட்ட ஏராளமான துறையின் கீழ் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.தர்மபுரி கலெக்டர் சதீஷ் தலைமை வகித்தார். எம்.பி., மணி, பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி, எஸ்.பி., மாதேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை