மேலும் செய்திகள்
அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
22-Oct-2024
செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்கிருஷ்ணகிரி, நவ. 1-கிருஷ்ணகிரி பழையபேட்டையில், நகர, அ.தி.மு.க., சார்பில், கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் செயல்வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம், நகர அவைத்தலைவர் ரியாஸ் தலைமையில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கி பேசினார்.கூட்டத்தில், சொத்துவரி, பால் விலை உயர்வு, வீட்டு வரி, மின்சார கட்டணத்தை உயர்த்தி, மக்களை துயரத்தில் தள்ளிய, மற்றும் போதை பொருட்கள் புழக்கம், சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டிப்பது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், லேப்டாப், ஆடு மாடு, அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம், மானிய விலை ஸ்கூட்டர் போன்ற நலத்திட்டங்களை நிறுத்திய, தி.மு.க., அரசை கண்டிப்பது. வரும் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், கிழக்கு மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் புதிய கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்ற வேண்டும். வரும், 2026ல் ஜெயலலிதாவின் நல்லாட்சியை இ.பி.எஸ்., தலைமையில் அமைக்க, அயராது உழைக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சியில், சுகாதார சீர்கேடுகளை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகர செயலாளர் கேசவன், துணைச்செயலாளர் சிவகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
22-Oct-2024