உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தையல், பின்னலாடை பயிற்சிக்கு சேர்க்கை

தையல், பின்னலாடை பயிற்சிக்கு சேர்க்கை

ஓசூர்: மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில், பின்னலாடை மற்றும் தையல் இயந்திரம் இயக்குபவர் தொழிற்பிரிவில், 46வது அணிக்கான நேரடி சேர்க்கை வரும், 20 முதல் அடுத்த மாதம், 7 வரை நடக்கிறது.குறைந்தப்பட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 40 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் பள்ளி படிப்பு முடித்தவர்கள், கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாயும், சேர்க்கை கட்டணமாக, 100 ரூபாயும் செலுத்த வேண்டும். தினமும் காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை, மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சி முடித்த அனைவருக்கும், நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியுள்ள அனைவரும் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன், ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு, துணை இயக்குனர் அல்லது முதல்வர், ஓசூர் அரசு ஐ.டி.ஐ., என்ற முகவரியில் நேரடியாகவோ, 04344 262457 என்ற தொலைபேசி எண்ணிலோ அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !