மேலும் செய்திகள்
பொதுக்கூட்டம்
24-Sep-2024
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்ஊத்தங்கரை, அக். 22-ஊத்தங்கரையில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி ஆலோசனை வழங்கி பேசினார். வரும், 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அதிகப்படியான ஓட்டுக்களை பெற்று, 4வது முறையாக ஊத்தங்கரை, அ.தி.மு.க.,வின் கோட்டையாக நிரூபிக்க கேட்டுக்கொண்டார். மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய செயலாளர்கள் வடக்கு வேடி, மத்திய சாமிநாதன், தெற்கு வேங்கன் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
24-Sep-2024