உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேளாண் தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கம்

வேளாண் தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தில், தமிழ்நாடு காலநிலை மாற்றத்துறை சார்பில், இயற்கை வேளாண் தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.வேளாண் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய வேளாண் விஞ்ஞானி கிருஷ்ணவேணி, எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி செந்தில்குமார் ஆகியோர் பேசினர். வேளாண் துணை இயக்குனர்கள் கலா, காளியப்பன் ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அம்சாராஜன் குறைகளை எடுத்துக்கூறி, வேளாண் துறை மூலம் விளக்கங்களை பெற தேவையான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்து கொண்டுள்ளது என்றார். இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டனர்.தொடர்ந்து, பாலாறு வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், வேளாண் பணி அனுபவ பயிற்சி மூலம் கண்காட்சி நடத்தி, விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களை செயல்முறையாக விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை