உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி: கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.கிழக்கு மாவட்ட செயலர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மல்லையன் வரவேற்றார். நகர செயலர் கேசவன், ஒன்றிய செயலர்கள் கன்னியப்பன், ராஜன், சக்கரவர்த்தி, ராமமூர்த்தி, பாலசுப்பிரமணியன், மாதேஷ், விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது: எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், அப்போதைய முதல்வராக இருந்த இ.பி.எஸ்., கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, 600 கோடி ரூபாய்க்கு திட்டங்களை செயல்படுத்தினார். ஏரிகளை துார்வாரி அந்த மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார். ஆனால் தி.மு.க., ஆட்சியில், ஏரியை துார்வாரி தனியார் நிறுவனம் பிளாட் போடும் இடத்திற்கு விற்கின்றனர்.கடந்த, 2021ல் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருந்தால், தி.மு.க., தலைவர் என்ற அந்தஸ்தே ஸ்டாலினிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கும். 520 வாக்குறுதிகளில், 1,000 ரூபாய் கொடுத்தீர்கள். வேறு எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு பேசினார். கூட்டத்தில், எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி