மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
10-Oct-2025
போச்சம்பள்ளி: பர்கூர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பட்டணம் வடக்கு ஒன்-றியம், அரசம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க.,வின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், அகரம், குடிமேனஹள்ளி, வாடமங்கலம், பாப்பாரப்-பட்டி, பண்ணந்துார், அரசம்பட்டி, பாரூர் உள்ளிட்ட பஞ்.,களுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வா-கிகள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும், அ.தி.மு.க., ஆட்-சியில் மக்களுக்கு நிறைவேற்றிய நலத்திட்டங்கள் மற்றும் உத-விகள் குறித்து வீடு, வீடாக திண்ணை பிரசாரம் செய்து, ஓட்டு சேகரிக்க கூறப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர்., மன்றம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாதையன், அண்ணாதுரை, திருமால் உள்ளிட்ட மாவட்ட மற்றும் ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
10-Oct-2025