உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை, அ.தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஊத்-தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார் முன்னிலை வகித்தார். சென்னப்பநாயக்கனுார், மாரம்பட்டி, வெள்ளகுட்டை, பெரிய தள்ளப்பாடி, கோவிந்தாபுரம், மகனுார்பட்டி, ஆண்டியூர், கீழ் மத்துார், காரப்-பட்டு, கதவனி, உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளருமான ராதாகிருஷ்ணன் பேசினார். இதில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தென்-னரசு, மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம், ஒன்றிய செய-லாளர்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், மத்திய சாமிநாதன், நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ