உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஓசூர்: ஓசூரில் பாகலுார் ஹவுசிங் போர்டிலுள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோ-சனை கூட்டம் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார். பூத் கமிட்டி பொறுப்-பாளரும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் வரும், 15ல், ஓசூரிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன், ஓசூர் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்-தப்படும் என, இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். அதனால் ஆர்ப்பாட்-டத்தில் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. ஜெயல-லிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட தலைவர் சந்திரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், பகுதி செயலாளர்கள் ராஜூ, வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி