உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

சூளகிரி, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திர காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்தில் நீதி கேட்டும், தமிழக அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., அரசை கண்டித்தும், அஜித்குமார் கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்கக்கோரியும், அஜித்குமார் புகைப்படத்துடன் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். ஒன்றிய பொருளாளர் நாராயணப்பா, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய, மாவட்ட பிரதிநிதிகள் நாகேஷ், ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !