மேலும் செய்திகள்
த.வெ.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
03-Apr-2025
ஓசூர்:கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் ஓசூர் மாநகர வடக்கு செயலாளர், அசோகா தலைமையில், ஓசூர் தேசிய நெடுஞ்சாலைஜூஜூவாடி பகுதியில், தண்ணீர் பந்தல் திறப்பு நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர், கலசபாக்கம் பன்னீர்செல்வம் ஆகியோர், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், மோர், வெள்ளரிக்காய், திராட்சை, குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினர்.இதில், ஓசூர் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், மாமன்ற உறுப்பினர்கள் பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
03-Apr-2025