உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டும் பணி

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டும் பணி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக, உலக எய்ட்ஸ் தினம் கடந்த, 1-ல் கடைபிடிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும், ஆங்காங்கே எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசார விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மத்துார் ஆட்டோ ஸ்டாண்டிலுள்ள ஆட்டோக்களில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதில் மத்துார் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அபிராமி, எய்ட்ஸ் தடுப்பு மண்டல திட்ட மேலாளர் முருகன், ஆலோசர் ஸ்ரீதேவி, ஆய்வக பணியாளர் சக்திவேல் மற்றும் 15க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை