போச்சம்பள்ளி அருகே ஐஸ்வர்ய தீட்சை பயிற்சி
போச்சம்பள்ளி அருகே'ஐஸ்வர்ய தீட்சை' பயிற்சிஓசூர், செப். 26-கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மேட்டுபுலியூரில், 'பரஞ்ஜோதி ஐஸ்வர்ய சோம தீட்சை' என்ற பயிற்சி நடந்தது. இதை யோகநாதன் தாசாஜி நடத்தினார். இதில் பங்கு பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு, புதிய தொழில் வாய்ப்பு, வேலைவாய்ப்பு, முன்னேற்றம், ஐஸ்வர்ய வளர்ச்சி, கடன் தீருதல், ஆரோக்கியம், உறவுகளில் அன்பு ஏற்படுதல் போன்றவை ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பயிற்சி பெற்றனர். மனிதன் தினமும் சந்தித்து வரும் பிரச்னைகளில் பெரும்பாலானவை உடல் ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தான்.வெளி உலகில் நமக்கு ஏற்படும் இடர்கள் அனைத்தும், நம் உள் உணர்வின் பிரதிபலிப்பு தான். பரஞ்ஜோதி சோம தீட்சையில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பரம்பொருள் பரஞ்ஜோதி அம்மா பகவானின் கருணை மிக்க அனுக்கிரகத்தால் மாற்றம் ஏற்படும். அத்துடன் வெளியுலகில் சம்பூர்ண ஆரோக்கியம், ஐஸ்வர்ய வளர்ச்சி, செல்வ, செழிப்பு போன்ற மாற்றங்கள் நிகழும் என, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தெரிவித்தனர்.