உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓசூர், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் ராஜா ரெட்டி தலைமை வகித்தார். நாகராஜ ரெட்டி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ரவீந்திரன், செயலாளர் பெருமாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீட்டுமனை பட்டா, இலவச வீட்டு மனை, தரிசு நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அனைவரும், சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தியிடம் மனு அளிக்க சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், நான்கு பேரை மட்டும் சென்று மனு அளிக்குமாறு கூறினர். இதை விவசாயிகள் சங்கம் ஏற்க மறுத்து, தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து, மனுக்களை வாங்கி கோரிக்கைகளை கேட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி