உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அம்ருதா பள்ளி சிறப்பிடம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அம்ருதா பள்ளி சிறப்பிடம்

அரூர் தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவி பவ்யஸ்ரீ, 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளி யில் முதலிடம் பிடித்தார். இவர், பாடவாரியாக தமிழ்-98, ஆங்கிலம்-97, கணிதம்-99, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவியர் அக் ஷயா-488, நித்தியஸ்ரீ-481, பிரபா-480, நித்யா ஸ்ரீ-478 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். மேலும் நடந்து முடிந்த, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்று, இப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.சாதனை படைத்த மாணவியரை தாளாளர் மாணிக்கம், சுமதி மாணிக்கம், நிர்வாக இயக்குனர்கள் சாகுல், விமல்நாத், முதல்வர் கார்த்தி கேயன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை