மேலும் செய்திகள்
ஓவியக்கலையின் பிரமாண்டம் ராமலிங்க விலாசம்
23-Nov-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பழமையான வெண்சாந்து பாறை ஓவியங்களை வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், பூமலை நாமஜூனை பாறையில், 350க்கும் மேற்பட்ட குறியீடுகள், மனித, விலங்கு ஓவியங்கள், 10 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட இயற்கை குகை விதானத்தில் வெண்சாந்தினால் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவிய தொகுப்பின் மையத்தில், ஒரு திரிசூல வடிவிலான பெண் தெய்வம், இருபக்கமும் வீரர்கள் தெய்வத்தை நோக்கி இருப்பவர்களாக காட்டப்பட்டுள்ளனர். 2,000 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்தை, தமிழி என்கிறோம். இந்த எழுத்துக்கள் எப்படி தோன்றியது என்பது இதுவரை கண்டறியவில்லை. இந்த ஓவியத்தில் காணப்படும் குறியீடுகள், அகழாய்வில் கிடைக்கும் பானை ஓடுகள் மற்றும் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன. இந்த குறியீடுகளில் இருந்தே, தமிழி எழுத்துகள் தோன்றியிருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
23-Nov-2025