உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேக அலங்காரம்

ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேக அலங்காரம்

கிருஷ்ணகிரி, ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை கிரிஜாம்பாள் உடனுறை கவீஸ்வரர் கோவில், பழையபேட்டை சோமேஸ்வரர் கோவில், புதுப்பேட்டை ராசுவீதி பிரசன்ன பார்வதி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவில் என, மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து, பூஜை நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கட்டிகானப்பள்ளி புதிய வீட்டுவசதி வாரியம் பகுதி - 2ல், பார்வதிதேவி கருமாரியம்மன் கோவில் அருகிலுள்ள விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோவிலில், அன்னாபிஷேகம், காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் நடந்தது.அன்னாபிஷேகத்தையொட்டி, பிரசன்ன பார்வதி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், இந்து முன்னணி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ