அண்ணாதுரை பிறந்தநாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம.எல்.ஏ., தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன், துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். *கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் ஒசூர் மாநகராட்சி, அண்ணாநகர் பகுதியிலுள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம், ராசுவீதி அண்ணாசிலை, டவுன் பஸ் டிப்போ, காவேரிப்பட்டணம் ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., அண்ணாவின் படம் மற்றும் சிலைக்கு மலர் துாவி மரியாதை செய்தார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.* போச்சம்பள்ளி, குள்ளனுாரில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் திருமால் தலைமையில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோல், காவேரிப்பட்டணம் ஒன்றியம், நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி, அரசம்பட்டியில் கொண்டாடப்பட்டது.* மத்துார் வடக்கு ஒன்றியம் சார்பிலும், பர்கூர் தொகுதி, போச்சம்பள்ளியிலும், 'ஓரணியில் தமிழ்நாடு' ஓட்டுச்சாவடி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.* ஊத்தங்கரையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,தமிழ்செல்வம் தலைமையில் கட்சியினர் அண்ணாதுரை உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர் * ஊத்தங்கரையில், தி.மு.க., சார்பில் ரவுண்டானாவிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.* தி.மு.க., சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுாரில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், அண்ணாதுரை உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர். பின் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி எடுத்தனர்.