மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்குபொங்கல் பரிசு வழங்கல்
10-Jan-2025
ஊத்தங்கரை: ஊத்தங்கரை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் மேல்நி-லைப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி பி.டி.ஏ., தலைவர்கள் அமானுல்லா, மகளிர் பள்ளி தேவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரி-யர்கள் பெரியசாமி, ராதிகா வரவேற்றனர். விழாவில் தி.மு.க., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பேசினர். மாணவர்களின் திறன் வெளிப்பாடுகளாக தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் பேச்சு, கவிதை கூறல், தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்-சிகள் நடந்தன.
10-Jan-2025