உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்களுக்கு கலை பயிற்சி

மாணவர்களுக்கு கலை பயிற்சி

பென்னாகரம், சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு கலைபயிற்சி நேற்று வழங்கப்பட்டது. மாணவர்களிடையே பொதிந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் விதமாக மாணவர்களுக்கு கதை, பாடல், நாடகம், ஓவியம், நடனம், பொம்மலாட்டம், எளிய பொருள்களை கொண்டு கலைப்பொருட்கள் செய்தல், ஓரிகாமி கலை உள்ளிட்ட பயிற்சிகள் மதுரை டிராமா செல்வம் மூலம் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு எளிய முறையில், ஒரு கதையை எவ்வாறு உருவாக்குவது, அக்கதையில் அறிமுகம், பிரச்னை, முயற்சி, முடிவு உள்ளிட்டவைகளை உள்ளடக்கி மாணவர்கள் கதைகளை எழுதுவதற்கு பயிற்சி வழங்கப்பட்டது.அதேபோன்று, அனைத்து விதமான பயிற்சிகளும் எளிய முறையில் மாணவர்கள் கற்றுக்கொண்டு, அதை பின்பற்ற ஏற்ற வகையில் பயிற்சி வழங்கினார். பயிற்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பழனி செய்திருந்தார். கல்வி -40 அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்த் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பழனிசெல்வி, கல்பனா, திலகவதி, கலைச்செல்வி, அனுப்பிரியா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை