உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர் ஓட்டிய பைக் மீது ஆட்டோ மோதி விபத்து

மாணவர் ஓட்டிய பைக் மீது ஆட்டோ மோதி விபத்து

மாணவர் ஓட்டிய பைக் மீதுஆட்டோ மோதி விபத்துகிருஷ்ணகிரி, டிச. 22-கிருஷ்ணகிரி, சென்னை சாலையிலுள்ள ஒரு தியேட்டர் அருகில் நேற்று முன்தினம், 16 வயதுள்ள பாலிடெக்னிக் மாணவர், ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். பின்னால் வேகமாக வந்த ஆட்டோ மோதியதில், மாணவர் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார், ஆட்டோ டிரைவர் கணபதி மீது வழக்கு பதிந்தனர். இந்நிலையில், கவனக்குறைவாக ஆட்டோவை ஓட்டியதாக கூறி மாணவனின் உறவினர்கள், ஆட்டோ டிரைவரான, கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி, 22, என்பவரை சரமாரியாக தாக்கினர். கணபதி புகார் படி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலை, கணபதி நகரை சேர்ந்த மதன், 21, தனுஷ், 24, சாமுவேல் மற்றும் சிலர் மீதுவழக்கு பதிந்தனர்.கிருஷ்ணகிரி நகர சாலைகளில், ஆட்டோக்கள் விதிகளை மீறி குறுக்கும் நெடுக்குமாக சென்று வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குகள் பதியவில்லை. அதே போல, 18 வயது நிரம்பாதோர் டூவீலர்களை ஓட்ட தடை விதித்து, சட்டம் இயற்றிய நிலையில், சட்டம் அமல்படுத்தப்பட்ட போது சிறுவர்கள் சிலரின் பெற்றோரை கைது செய்த போலீசார், அதன் பின் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் இருதரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இது போன்ற சம்பவங்கள் தொடராது என, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை