உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துாய்மை பணி குறித்த விழிப்புணர்வு

துாய்மை பணி குறித்த விழிப்புணர்வு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 18 வது வார்டுக்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளி நேதாஜி நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், துாய்மை பணிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஓசூர் மேயர் சத்யா தலைமை வகித்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, துாய்மை பணியை துவக்கி வைத்தார். துாய்மைப்படுத்தப்பட்ட பகுதியில் தடுப்புகள் அமைத்து, அப்பகுதியில் மக்கள் தொடர்ந்து குப்பை கொட்டாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.மேலும், பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பையை, மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து, தனித்தனியாக மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, பொதுமக்களிடம் மேயர் சத்யா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கவுன்சிலர்கள் வெங்கடேஷ், சசிதேவ், சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி