| ADDED : டிச 02, 2025 02:27 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லுாரியில், செஞ்சுருள் சங்க மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பி.எம்.சி., செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியம், இயக்குனர் சுதாகரன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி செஞ்சுருள் சங்க மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன் மற்றும் சூளகிரி செஞ்சுருள் சங்க ஆலோசகர் விஜய் ஆகியோர், எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் களப்பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட களப்பணியாளர் ராதா, கிருஷ்ணகிரி மண்டல மேற்பார்வையாளர் அருள் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். சூளகிரி அரசு மருத்துவமனைக்கு களப்பயிற்சிக்காக மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, டாக்டர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் மூலம், எய்ட்ஸ் தொற்று, தடுப்பு முறைகள், ரத்த மாதிரி பரிசோதனை, பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியை, கல்லுாரி தமிழ் விரிவுரையாளர் அரவிந்த் தொகுத்து வழங்கினார்.