அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆயுதபூஜை
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆயுதபூஜைஓசூர், அக். 12-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா, துறை வாரியாக தனித்தனியாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறைக்கும் கல்லுாரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை வகித்து பூஜையை நடத்தி வைத்தார். துறை தலைவர்கள் பாலாஜி பிரகாஷ், புவியரசு, நாகராஜன், செல்வராஜ், நான்சி மற்றும் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் ஹரன், சந்திரசேகர், மானசா, நந்திதா சந்தோஷ், மகேந்திரன், சுனிதா உட்பட பலர் பங்கேற்றனர். மின்னியல் துறை தலைவர் பாலாஜி பிரகாஷ் நன்றி கூறினார்.