மேலும் செய்திகள்
ஆவணி பூஜை
18-Aug-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில், சேலம் சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த, 31ல், மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை, 5:30 மணிக்கு, அஷ்டதிரவிய மஹாகணபதி ஹோமம், சுவாமிக்கும், கலசத்திற்கும் பூஜை, பிரம்ம கலசாபிஷேகம், மூலவர் ஐயப்ப சுவாமி புனர்பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் ஆகியவை நடந்தது. காலை, 11:30 மணிக்கு, கேரள மாநிலம் சென்னிதலாவை சேர்ந்த பிரம்மஸ்ரீ புத்தில்லம் மனோஜ் நம்பூதிரி, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகத்தை நடத்தினார். தொடர்ந்து, மஹா தீபாராதனை, 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
18-Aug-2025