உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சித்தப்பாவை திருமணம் செய்த பி.இ., படிக்கும் மாணவி

சித்தப்பாவை திருமணம் செய்த பி.இ., படிக்கும் மாணவி

ஓமலுார், சேலம் மாவட்டம் ஓமலுார், நாராயணன் நகரை சேர்ந்த 21 வயது பெண், பி.இ., படிக்கிறார். அதே பகுதியில் வசிக்கும், 21 வயது எலக்ட்ரீஷியன். இருவரும் காதலித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களை, ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினர். அங்கு இருவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், பெண்ணுக்கு, பையன் சித்தப்பா உறவு முறை என கூறினர். இதுகுறித்து போலீசார் அறிவுரை கூறிய போது, காதல் தம்பதியர் ஏற்கவில்லை. இதனால் போலீசார், 'கலிகாலம்... எப்படியோ போங்க...' என, கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை