உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி ஒன்றியம், சிக்கபூவத்தி பஞ்., கொடுகூர் கிராமத்தில், 4.70 லட்சம் ரூபாய் மதிப்பில் சின்டெக்ஸ் தொட்டி-யுடன் புதிய ஆழ்துளை கிணறும், சிக்கபூவத்தி கிராமத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையும் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை கிருஷ்ணகிரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கன்னி-யப்பன், சோக்காடி ராஜன், சூர்யா, மாவட்ட மகளிர் அணி தலைவி சுகந்தி மாது, விவசாய அணி ஒன்றிய செயலாளர் ராஜூ, முன்னாள் பஞ்., தலைவர் கொடிலா ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பச்சம்மாள், ராஜன், ஒப்பந்-தாரர் அசோக்குமார், மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை