உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுவர்கள் மீது பைக் மோதல்; டெய்லர் பலி

சிறுவர்கள் மீது பைக் மோதல்; டெய்லர் பலி

கிருஷ்ணகிரி,:குருபரப்பள்ளி அடுத்த தளவாய்பள்ளியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் நேரலகிரியை சேர்ந்த 12 வயது சிறுவன் இருவரும் நண்பர்கள். இவர்கள் கடந்த, 5 இரவு பண்டப்பள்ளி அருகே வேப்பனஹள்ளி - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்றுள்ளனர். அவ்வழியாக ஹோண்டா சைன் பைக்கில், போச்சம்பள்ளி அடுத்த வீரமலையைச் சேர்ந்த டெய்லர் சுப்பிரமணி,54, சென்றுள்ளார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் நடந்து சென்ற சிறுவர்கள் மீது மோதி கவிழ்ந்தது. இதில், டெய்லர் சுப்ரமணி இறந்தார். படுகாயமடைந்த சிறுவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை