உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி நீட் தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

அரசு பள்ளி நீட் தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

ஓசூர்:ஓசூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, 1.24 லட்சம் ரூபாய் மதிப்பில், நீட் தேர்வு பயிற்சிக்கான பாட புத்தகங்களை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கி பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வு எழுத, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை மற்றும் ஓசூரில், இலவச சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த, 3 முதல் நடக்கிறது. ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நீட் தேர்வு பயிற்சி மையத்தில், பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், நீட் தேர்விற்கான பாட புத்தகம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, சமூக பொறுப்பு நிதியிலிருந்து, பாட புத்தகங்கள் மற்றும் வினா வங்கி புத்தகம் அடங்கிய, 48 செட் பாட புத்தகங்கள், 1.24 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மாணவ, மாணவியர் நல்ல முறையில் நீட் தேர்வு எழுதி, வெற்றி பெற்று சிறந்த மருத்துவர்களாக உருவாக வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குறள்வாசுகி, மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, ஓசூர் மைய நீட் பயிற்சியாளர் ஞானசுந்தரி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ