உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைப்புடன் பானை விற்பனை துவக்கம்

பைப்புடன் பானை விற்பனை துவக்கம்

ஈரோடு: வெயிலில் தாக்கம் தற்போதே அதிகரித்துள்ளதால், ஈரோட்டில் மண் பானை விற்பனை தற்போதே தொடங்கியுள்ளது. கொல்லம்-பாளையத்தில் மண்பானை விற்கும் அரவிந்தன் கூறியதாவது: கோடை போல் வெயில் அடிப்பதால், மண்பானையை பலர் விரும்பி வாங்கி செல்கின்றனர். வழக்கமான மண் பானை, 530 ரூபாய், பைப் இணைக்கப்பட்ட பானை, 580 ரூபாய், 25 லிட்டர் கேனை கவிழ்த்து தண்ணீர் பிடிக்கும் வகையிலான மண் பானை, 550 மற்றும், 600 ரூபாய்க்கும், தண்ணீர் ஜக், 300 ரூபாய் முதல் விற்பனைக்கு உள்-ளன. தண்ணீர் பானையில், 12 முதல், 14 லிட்டர் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். முறையாக மண் பானையை பராமரித்தால், மூன்றாண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம். தற்போது துவங்கிய மண் பானை விற்-பனை ஜூன் இறுதி வரை நடக்கும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை