உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

அரூர், கர்நாடகா மாநிலம், பெங்களூரு பொம்மனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 40. இவரது மகன் ராகுல், 15, பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சுரேஷ் நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில் தென்பெண்ணையாற்றில் உள்ள சென்னியம்மன் கோவிலுக்கு வந்தார். வழிபாடு செய்வதற்கு முன், ராகுல் மற்றும் அவருடன் வந்த, இரண்டு சிறுவர்கள் ஆற்றில் குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற ராகுல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை