வீரபத்ரசுவாமி கோவிலில் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக்கடன்
பர்கூர்,:பர்கூர் அடுத்த அம்மேரி கிராமத்தில் வீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று நடந்த கோவில் திருவிழாவில், குரும்பர் இன மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான தப்பட்டை, பாங்கா வாத்தியங்களை இசைத்து பஜனை பாடினர்.தொடர்ந்து கோவில் பூசாரி பூங்கரகம் எடுத்து ஆடினார். பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வீரபத்ரசுவாமிக்கு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பர்கூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.