உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் ரயில்வே சுரங்கப்பாதையில் பழுதான லாரி 10 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு

ஓசூர் ரயில்வே சுரங்கப்பாதையில் பழுதான லாரி 10 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு

ஓசூர்,ஓசூர் ரயில்வே சுரங்கப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால், 10 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை உள்ளது. ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வரும் வாகன ஓட்டிகள், சுரங்கப்பாதை வழியாக, தேன்கனிக்கோட்டை சாலைக்கு சென்று வருகின்றனர். அதேபோல், தேன்கனிக்கோட்டை சாலையிலிருந்து, ஓசூருக்குள் வரவும் இந்த சுரங்கப்பாதை பயன்படுத்தப் படுகிறது. குறுகலான இப்பாதையில், ஒரு வாகனம் சென்றால், எதிரே வாகனம் வர முடியாது. அப்படிப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, அவ்வழியாக சென்ற லாரி, சுரங்கப்பாதையின் மேடான பகுதியில் ஏற முடியாமல் பழுதாகி நின்றது. அதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து பாதித்தது.காலை, 11:40 மணிக்கு லாரியை சரிசெய்த பின் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் போக்குவரத்து சீரானது. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பேரிங் பழுதான நிலையில், ஓசூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், சுரங்கப்பாதைக்குள் லாரி பழுதானதால், அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சுற்றிக்கொண்டு சென்றனர். அதனால் போக்குவரத்து பாதிப்பு மேலும் அதிகரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை