உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 மணி நேரத்திற்கு மேல் வராத பஸ்கள்: கொட்டும் மழையில் காத்திருந்த மக்கள்

2 மணி நேரத்திற்கு மேல் வராத பஸ்கள்: கொட்டும் மழையில் காத்திருந்த மக்கள்

சூளகிரி: கிருஷ்ணகிரி மற்றும் ஓசூருக்கு இடையே, சூளகிரி அமைந்துள்-ளது. ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரிக்கு இடையே இயக்கப்படும் பல அரசு பஸ்கள், சூளகிரி பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதில்லை. சில அரசு பஸ்கள், தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. அதனால், ஓசூர் மற்றும் கிருஷ்ண-கிரி செல்ல வரும், சூளகிரி பகுதி பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. நேற்றிரவு, 7:00 மணி முதல், 2 மணி நேரத்திற்கு மேலாக, சூளகிரி பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வராமல் தேசிய நெஞ்சாலையிலேயே சென்றன. அதனால், மருத்-துவம் மற்றும் தொழில் சார்ந்து, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி செல்ல, சூளகிரி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த, 300க்கும் மேற்-பட்ட பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அத்துடன் மழையும் பெய்ததால், நனைந்தபடி பஸ்சிற்காக பயணிகள் காத்திருந்தனர். சூளகிரி பகுதியில் மழையால் மின்தடையும் ஏற்பட்டிருந்தது. அதனால், பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடும் சிரமத்தை சந்தித்தனர். சூளகிரி பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு பஸ்கள் முறையாக வந்து செல்ல, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க, பய-ணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை