கஞ்சா பயிரிட்டவர் சிக்கினார்
ஓசூர்: உத்தனப்பள்ளி அடுத்த பண்டப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், 38. இவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார் அங்கு சோதனை நடத்தியதில், வீட்டில் அவர் கஞ்சா செடி வளர்ப்பது தெரிந்தது. செடியை பறிமுதல் செய்த போலீசார், முனிராஜை கைது செய்தனர்.