உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போக்சோவில் கார் டிரைவர் கைது

போக்சோவில் கார் டிரைவர் கைது

ஓசூர்: ஓசூர் அடுத்த அச்செட்டிப்பள்ளி அருகே என்.பி.,அக்ரஹாரத்தை சேர்ந்தவர் யோகேஷ், 43. கார் டிரைவர். இவர் தன் வீட்டிற்கு விளையாட வந்த, 3 வயது பெண் குழந்தையை, நேற்று முன்தினம் பாலியல் தொந்தரவு செய்தார். இதையறிந்த குழந்தையின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், டிரைவர் யோகேஷை கைது செய்தனர். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !