உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்டையில் மூழ்கி கார் மெக்கானிக் சாவு

குட்டையில் மூழ்கி கார் மெக்கானிக் சாவு

ஓசூர், அரூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 54. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் தங்கி, கார் மெக்கானிக் வேலை செய்து வந்தார். கடந்த, 28ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ஓசூர் பத்தலப்பள்ளி டாஸ்மாக் கடை அருகே உள்ள குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் குட்டைக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி