அ.தி.மு.க., கொடி கம்ப பீடம் அமைத்த 4 பேர் மீது வழக்கு
அ.தி.மு.க., கொடி கம்ப பீடம்அமைத்த 4 பேர் மீது வழக்குஅரூர், நவ. 21- அரூர் அடுத்த அச்சல்வாடியில் கடந்த, 17ல் இரவு, 11:00 மணிக்கு, அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி, அ.தி.மு.க., கொடி கம்பம் அமைக்க பீடம் அமைக்கப்பட்டது. இது குறித்து அச்சல்வாடி வி.ஏ.ஓ., சங்கீதா, 44, புகார் படி, அரூர் போலீசார் அச்சல்வாடியை சேர்ந்த சந்துரு, 25, சூரியா, 28, கார்த்திக், 32, மதிவாணன், 48, ஆகிய, 4 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.