எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த பாரத கோவிலில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி பெறவில்லை. இது குறித்து, ஒப்பதவாடி வி.ஏ.ஓ., தமிழரசன் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார் எருது விடும் விழாவை ஏற்பாடு செய்த பாரத கோவிலை சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.