உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரேஷன் ஊழியரிடம் தகராறு டிரைவர் மீது வழக்குப்பதிவு

ரேஷன் ஊழியரிடம் தகராறு டிரைவர் மீது வழக்குப்பதிவு

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்ணம் அருகே தாசம்பட்டியை சேர்ந்த தங்கதுரை, 27. ரேஷன் கடை விற்பனையாளர். நேற்று முன்தினம் காலை, 11:20 மணிக்கு, சவுளூர் ரேஷன் கடையில் இருந்தபோது, அங்கு வந்த சவுளூரை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 35, என்பவர், தன் தாய்க்கு ரேஷன் பொருட்கள் தாமதமாக தருவதாக கூறி, தகராறில் ஈடு-பட்டு, தங்கதுரையை கையால் தாக்கினார். மேலும், ரேஷன் கடையிலிருந்த தராசு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பி.ஓ.எஸ்., இயந்திரத்தை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தார். விற்-பனையாளர் தங்கதுரை புகார் படி, கார்த்திக் மீது, காவேரிப்பட்-டணம் போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை